மகளின் புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வாழ்நாள் சேமிப்பை செலவழித்த தாய்க்கு கிடைத்த லாட்டரி பரிசு!
அமெரிக்காவை சேர்ந்த பெண் தனது மகளது புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வாழ்நாள் சேமிப்பை செலவழித்த பின்பு, அதிர்ஷ்டவசமாக அவருக்கு $2 மில்லியன் டொலர் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சை
அமெரிக்காவின் லேக்லாண்டில் உள்ள கெரால்டின் கிம்ப்லெட்(Geraldine Gimblet) என்ற பெண் தனது மகளுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டதால் மிகவும் துயரப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மகளது சிகிச்சைக்காக தன் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தை கொண்டு சிகிச்சையை துவங்கியுள்ளார்.
தனது மகளது இறுதி சுற்று மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக எல்லா பணத்தையும் செலவழித்து விட்டு, மகளை காப்பாற்றினால் போதும் என்ற நிலையிலிருந்த பெண்ணுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
லாட்டரி பரிசு
லேக்லாண்டில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு $2 பில்லியன் டொலர் பரிசு கிடைத்திருக்கிறது.
"முதலில், பெட்ரோல் நிலைய எழுத்தர் டிக்கெட்டுகள் இல்லை என்று நினைத்தார், ஆனால் குறுக்கெழுத்து விளையாட்டுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் நான் அவரிடம் இரண்டு முறை சரிபார்க்கச் சொன்னேன். அவர் கடைசியாகக் கண்டுபிடித்தார்!" என்று கிம்ப்லெட் கூறியுள்ளார்.
கிம்ப்லெட் மொத்தமாக $1,645,000 டொலரை வீட்டிற்கு வாங்கி சென்றார் என (florida lottery) புளோரிடா லாட்டரியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா லாட்டரியால் ட்விட்டரில் பகிரப்பட்ட புகைப்படத்தில், கிம்பிள், தல்லாஹஸ்ஸியில் உள்ள புளோரிடா லாட்டரி தலைமையகத்தில், தனது மகள் மற்றும் பேத்தி உட்பட அவரது குடும்பத்தினருடன், தனக்கு கிடைத்த லாட்டரி பரிசுடன் புன்னகையோடு போஸ் கொடுக்கிறார்.
When Geraldine Gimblet of #Lakeland picked up the last $2,000,000 BONUS CASHWORD Scratch-Off game, her passion for crossword games paid off to the tune of a $2 million-dollar top prize, but that’s just the beginning of a truly, winning story! ?https://t.co/q5mFPaUHR4 pic.twitter.com/mv55B9zmz9
— Florida Lottery (@floridalottery) April 7, 2023
”என் அம்மா இந்த டிக்கெட்டை வாங்குவதற்கு முந்தைய நாள், மார்பக புற்றுநோய்க்கான எனது கடைசி சிகிச்சையை முடித்துவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினேன்."
"நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னைக் கவனித்துக்கொள்வதற்காக என் அம்மா தனது வாழ்நாள் சேமிப்பை செலவழித்தாள். அம்மாவிற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” என சிகிச்சையிலிருந்து மீட்டு வந்த கிம்ப்லெட்டின் மகள் கூறியுள்ளார்.