இந்தியாவுடன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாது: திட்டவட்டமாக அறிவித்த தீவு நாடு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவுடன் செய்து கொண்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தை புதுப்பிக்க மாட்டோம் என்று மாலத்தீவு வெளிப்படையாக அறிவித்துள்ளது.
ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்
குறித்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவின் பொதுக் கொள்கைக்கான துணைச் செயலாளர் முகமது ஃபிருசுல் தெரிவிக்கையில், நாட்டின் இறையாண்மையை ஆபத்தில் ஆழ்த்தும் மற்ற நாடுகளுடனான இருதரப்பு மற்றும் இராஜாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே 'ஹஃப்தா-14' என்ற திட்டத்தின் ஒரு பகுதி என்றார்.
Credit: Mndf
மேலும், மாலத்தீவு ஜனாதிபதியும் அமைச்சரவையும் இந்தியா-மாலத்தீவுகளுக்கு இடையிலான ஹைட்ரோகிராஃபி ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகவும், ஒப்பந்தத்தின்படி தற்போதைய ஒப்பந்தத்தை ஜூன் 2024ல் காலாவதியாகும் ஆறு மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்க வேண்டாம் என்று ஒரு தரப்பினர் முடிவு செய்யலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய ஒப்பந்தமானது 2019 ஜூன் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணத்தின் போது ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், தீவு தேசத்தின் பிராந்திய நீர்நிலைகள், பாறைகள், தடாகங்கள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான ஆய்வு நடத்த இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
@pti
மாலத்தீவு அதிகாரத்தின் கீழ் மட்டுமே
இதனையடுத்து 2018 முதல், இந்திய கடற்படைக் கப்பல்கள் மாலத்தீவு முழுவதும் ஆய்வுக்காக பல பயணங்களை மேற்கொண்டுள்ளன. ஆனால் தற்போது மாலத்தீவு ஜனாதிபதி மொஹமத் முய்ஸுவும் அவரது அமைச்சரவையும் நாட்டின் நீர்நிலைகள் பற்றிய தகவல்களையும் தரவுகளையும் நாட்டிலேயே வைத்திருக்க விரும்புகின்றனர் என துணைச் செயலாளர் முகமது ஃபிருசுல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடல் நீர்வரைவியல் ஆய்வுப் பணிகள் இனி மாலத்தீவு அதிகாரத்தின் கீழ் மட்டுமே செய்யப்படும் என்றார். முன்னதாக இந்திய ராணுவத்தினர் அனைவரும் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என ஜனாதிபதி முய்ஸு உத்தரவிட்டிருந்தார்.
@reuters
அந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே, கடும் விவாதத்தையும் ஏற்படுத்தியதுடன், முய்ஸு சீனா பக்கம் சாய்வதாகவும் இந்திய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |