பொலிஸ் வேலைக்கு நன்றி: உலகின் அழகான போலிஸுக்கு குவியும் விருதுகள்!
மாடலாக மாற ஆசைப்பட்டு எனது பொலிஸ் வேலையை ஒருநாளும் விட்டு விட மாட்டேன் என உலகின் மிக அழகான பொலிஸ் அதிகாரியான டயானா ராமிரெஸ் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவின் மெடலின் நகரில் பெண் பொலிஸ் அதிகாரியாக இருக்கும் டயானா ராமிரெஸ் சமூக வலைதளங்களில் உலகின் மிக அழகான பெண் பொலிஸ் அதிகாரி என்று அழைக்கப்படுகிறது.
தேசிய பொலிஸ் பிரிவில் பணியாற்றுவதை மரியாதையாக கருதும் இந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.
நியூயார்க் போஸ்ட் அறிக்கை
செய்தி நிறுவனத்தின் அறிக்கையில், கொலம்பியாவின் பெண் பொலிஸ் அதிகாரியான டயானா, மெடலின் தெருக்களில் தினமும் ரோந்து பணிகளில் ஈடுபடுகிறார், இது ஒரு காலத்தில் உலகின் மிகவும் ஆபத்தான நகரமாக கருதப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
அதில் தான் ஒரு மாடலாகவோ அல்லது ஆன்லைன் செல்வாக்கு செலுத்துபவராகவோ மாறுவதற்காக எனது காவல்துறை வேலையை விட்டு விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
“எனக்கு மீண்டும் ஒரு தொழிலை தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்தால் நான் தயங்காமல், மீண்டும் பொலிஸ் அதிகாரியாக மாறுவேன் ஏனென்றால் நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காக காவல் துறை நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
விருதுகள்
இன்ஸ்டா பெஸ்ட் விருதுகளில் டயானா ராமிரெஸுக்கு ஆண்டின் சிறந்த பொலிஸ் அல்லது இராணுவ செல்வாக்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுகள் அதிக பார்வையாளர்களை அடையும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கும் நிபுணர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டயானா தெரிவித்த கருத்தில், இந்த நியமனத்தின் மூலம் காவல்துறையை பிரதிநிதித்துவபடுத்துவது ஒரு மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார்.