உலகிலேயே முதல்முறையாக... நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் Venice நகரம்
உலகிலேயே முதன்முறையாக, சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது ஒரு நகரம். அந்த நகரம், வெனிஸ்!
உலகிலேயே முதன்முறையாக...
உலகிலேயே முதல் முறையாக, இத்தாலியிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான வெனிஸ் நகரம், சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது.
From today, Venice becomes the first major city in the world to charge visitors to enter https://t.co/pDHjkczNll
— Samuel West ?? (@exitthelemming) April 25, 2024
கட்டணம் எவ்வளவு?
வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா செல்ல நுழைவுக்கட்டணம் 5.37 டொலர்கள், இலங்கை மதிப்பில், 1,593.46 ரூபாய்.
எதனால் வெனிஸ் நுழைவுக்கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது?
அதாவது, வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டதாம். அதை ஒழுங்குபடுத்தத்தான் இந்த கட்டணம் வசூலிக்கும் திட்டமாம்.
வெறும் 50,000 மக்கள் வாழும் வெனிஸ் நகரத்திற்கு, ஆண்டொன்றிற்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையோ, சுமார் 30 மில்லியன்!
Today #Venice became the 1st city to enforce charges & booking to enter a city (other places have limits & taxes but nothing comparable). Residents rightly protested against the payment booths & were forced back by police. This regulation destroys cities: https://t.co/YfHQ0Yyvs0 https://t.co/ExZ3zwZA5Q
— Dominic Standish (@domstandish) April 25, 2024
இந்த கட்டணம் எப்போது அமுலுக்கு வருகிறது?
உண்மையில், வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலா செல்ல நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஆம், நேற்று, அதாவது, ஏப்ரல் மாதம், 26ஆம் திகதி, இந்த திட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
Venice is leading the way with a tourist tax. Other great European cities should follow suit https://t.co/Sow3kJ1AvP
— Bradley Dodd (@BradDodd) April 25, 2024
இன்னொரு முக்கிய விடயம், இந்த கட்டணம் தற்காலிகமானதுதான். குறிப்பாக, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல், ஜூலை மாதம் 14ஆம் திகதி வரைதான் இந்த நுழைவுக்கட்டணம்.
கட்டணம் செலுத்தத் தவறுவோருக்கு, நுழைவுக்கட்டணத்துடன் 53.63 டொலர்கள் முதல் 321.77 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |