14 நாடுகளை இணைக்கும் உலகின் நீளமான சாலை - மறுமுனைக்கு செல்ல இத்தனை நாட்கள் ஆகுமா?
இந்தியாவின் நீளமான சாலையாக NH44 உள்ளது. இது இந்தியாவின் வடமுனையான காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து தொடங்கி, தென் முனையான கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
11 மாநிலங்களை கடந்து வரும் இந்த சாலையின் மொத்த நீளம் 4,113 கிலோ மீட்டர் ஆகும்.
உலகின் நீளமான சாலை
ஆனால், பான் அமெரிக்கா என அழைக்கப்படும் சாலையானது 14 நாடுகளை கடந்து, சுமார் 30,000 கிலோ மீட்டர் நீளத்துடன் உலகின் நீளமான சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த சாலையானது, வட அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள அலாஸ்காவின் ப்ருடோ விரிகுடாவிலிருந்து தொடங்கி, 14 நாடுகளை கடந்து தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் உள்ள அர்ஜென்டினாவின் உஷுவாயா வரை நீண்டுள்ளது.
இது, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா, கொலம்பியா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய 14 நாடுகளை கடந்து வருகிறது.
ஆனால், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு சாலையும் பான் அமெரிக்கா சாலையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
60 நாட்கள் பயணம்
30,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையில் நாளொன்றுக்கு 500 கிமீ தூரம் பயணம் செய்தால் கூட, ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை அடைய சுமார் 60 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.
1920 ஆம் ஆண்டில் இந்த சாலை அமைக்கும் திட்டம் தொடங்கி, 1937 ஆம் ஆண்டில் 14 நாடுகள் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டன. 1960 ஆம் ஆண்டில் இந்த சாலை முழுவதுமாக பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த சாலையை பராமரிக்கும் பொறுப்பை 14 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நீண்ட சாலையில் எங்கும் யூ டர்ன் போன்ற திருப்பங்களோ இல்லை என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |