உலகில் போக்குவரத்து நெரிசலான நகரங்கள்; சென்னையின் இடம் என்ன? எவ்வளவு நேரம் வீண்?
நெதர்லாந்தை தளமாக கொண்ட டாம்டாம் நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து குறியீட்டை வெளியிட்டுள்ளது.
உலகின் போக்குவரத்து நெரிசலான நகரங்கள்
இதில், உலகளவில் மெக்ஸிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ நகரம் போக்குவரத்து நெரிசலில் 75.9 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
2வது இடத்தில் 75.9 சதவீதத்துடன் இந்தியாவின் பெங்களூரு நகரம் உள்ளது.

பெங்களூருவில், சராசரியாக 15 நிமிடங்களில் 4.2 கிமீ தூரத்தை கடக்க முடிகிறது எனவும், ஆண்டுக்கு 168 மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் வீணாகிறது எனவும் தெரிவித்துள்ளது.
அயர்லாந்தின் டப்ளின், 72.9% போக்குவரத்து நெரிசல் மதிப்பெண்ணுடன் 3வது இடத்தையும், போலந்தின் லொட்ஸ்(LODZ) 3வது இடத்தையும், இந்தியாவின் புனே 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
63.2 சதவீதத்துடன் மும்பை 18வது இடத்தையும், 60.2 சதவீதத்துடன் டெல்லி 23வது இடத்தையும், 58.9 சதவீதத்துடன் கொல்கத்தா 29வது இடத்தையும் பிடித்துள்ளது.
சென்னை
இந்த பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 58.6% போக்குவரத்து நெரிசல் மதிப்பெண்ணுடன் 32வது இடத்தில் உள்ளது.

சென்னையில், 15 நிமிடத்தில் சராசரியாக 4.8 கிமீ பயணிக்க முடிகிறது. இது கடந்த ஆண்டை விட 0.2கிமீ குறைவு ஆகும்.
மேலும்,போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு 132 மணி நேரம்(5 நாட்கள் மற்றும் 12 மணி நேரம் வீணாகிறது. இது 2024 ஆம் ஆண்டை விட 3 மணி நேரம் 50 நிமிடங்கள் அதிகம் ஆகும்.
சென்னையில் கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி பயணம் செய்வதற்கு மோசமான நாளாக இருந்துள்ளது.
சராசரியாக சென்னையில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அளவு 69.4 சதவீதம் இருந்துள்ளது. இதில், 10 கிமீ பயணிக்க 33 நிமிடங்கள் ஆகிறது. சராசரி வேகம் மணிக்கு 17.7 கிமீ ஆகும்.

அதுவே மாலை நேரத்தில், போக்குவரத்து நெரிசல் அளவு 100.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில், 10 கிமீ பயணிக்க 41 நிமிடங்கள் ஆகிறது. சராசரி வேகம் மணிக்கு 14.6 கிமீ ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |