இறக்குமதிக்கு தயாராகும் உலகின் இரண்டாவது அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு
சர்க்கரை உற்பத்தியில் உலகின் இரண்டாவது நாடான இந்தியா, கடந்த ஆறு ஆண்டுகளாக சர்க்கரை ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
பிரேசில் 46.9 மில்லியன் மெட்ரிக் டன்
கடந்த அக்டோபர் மாதம் திடீரென்று சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா, போதுமான விளைச்சல் இல்லாத நெருக்கடியை அடுத்து எதிர்வரும் ஆண்டுகளில் சர்க்கரை இறக்குமதி செய்யும் கட்டாயத்தில் உள்ளது.
@reuters
மட்டுமின்றி, எல் நினோ தாக்கத்தால் உற்பத்திச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் வரையில் இந்தியா 33.1 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது. இதே காலகட்டத்தில் பிரேசில் மட்டும் 46.9 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது.
உலக அளவில் வர்த்தமாகும் சர்க்கரையில் சுமார் 12 சதவீதம் அளவுக்கு இந்தியாவின் பங்கு உள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 6.8 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
கரும்பு விளைச்சலில் 16 சதவீதம் வீழ்ச்சி
அக்டோபரில் தொடங்கிய வேளாண் வருடத்தில் ஆகஸ்ட் மாத நிகர உற்பத்தி 31.7 மில்லியன் மெட்ரிக் டன்களாக சரிவடைந்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தியாவில் செலவான சர்க்கரையின் அளவு இந்த ஆண்டு 29.2 மில்லியன் மெட்ரிக் டன் என்றே கூறப்படுகிறது.
@reuters
மகாராஷ்டிராவில், குறைந்த மழைப்பொழிவு கரும்பு விளைச்சலில் சராசரியாக 16 சதவீதம் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, சில பகுதிகளில் 40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |