13,000 அடி உயரத்தில் தொங்கிய சுற்றுலா பயணிகள்! திகிலூட்டும் சம்பவம்
உலகின் உயரமான இடங்களில் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் கார்களில் 75 சுற்றுலாப்பயணிகள் சுமார் 10 மணி நேரம் சிக்கித் தவித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஈக்வடார் நாட்டின் தலைநகரான Quitoவில் அமைக்கப்பட்டுள்ள கேபிள் கார்கள், உலகின் உயரமான கேபிள் கார்களில் ஒன்றாகும்.
மின்கோளாறு
நேற்று முன் தினம், மின்சார கோளாறு காரணமாக அந்த கேபிள் கார்கள் ஆங்காங்கே நின்றுவிட, சுமார் 10 மணி நேரமாகியும் கோளாறு சரி செய்யப்படவில்லை.
ஆகவே, அந்த சுற்றுலாப்பயணிகள் இரவு நேரத்தை அந்த கேபிள் கார்களிலேயே செலவிட நேர்ந்தது.
Así es el rescate de las personas atrapadas en el #Teleférico de #Quito . Más de 70 quedaron suspendidas y ya han pasado cerca de 7 horas desde que se reportó la falla técnica. pic.twitter.com/3aArsuTwLN
— Metro Ecuador (@MetroEcuador) July 7, 2023
இந்நிலையில், நேற்று அதிகாலை தீயணைப்பு வீரர்களும், பொலிசாரும் இணைந்து அந்த சுற்றுலாப்பயணிகளை மீட்டுள்ளனர்.
13,000 அடி உயரத்தில்...
கேபிள் கார்களில் சிக்கியவர்களில் 48 பேர், 13,000 அடி உயரத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது கேபிள் கார்கள் நின்றுவிட, மரண பயத்தை ஏற்படுத்தும் உயரத்தில் திகிலுடன் அமர்ந்திருந்திருக்கிறார்கள்.
அந்த கேபிள் கார் பயணிக்கும் குறைந்தபட்ச உயரமே 3,100 மீற்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |