உலகின் சக்திவாய்ந்த ராணுவம் கொண்ட நாடு இதுவா..! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
உலகின் சக்தி வாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியலை குளோபல் ஃபையர்பவர் (GFP) வெளியிட்டுள்ளது.
குளோபல் ஃபையர்பவர் (GFP) அறிக்கை
ராணுவம் என்பது ஒரு நாட்டிற்கான பாதுகாப்பு மட்டுமின்றி அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி கூடிய பயிற்சி பெற்ற வலிமையான ராணுவ படையாகும்.
இந்த ராணுவங்கள் தங்கள் நாட்டிற்கு ஏற்ற வகையில் பிரத்யேகமான பயிற்சி மற்றும் தகுதிகளை பெற்று இருக்கும்.
இந்நிலையில் உலக நாடுகளின் ராணுவ பலம் குறித்த தரவரிசை பட்டியலை குளோபல் ஃபையர்பவர் (GFP) வெளியிட்டுள்ளது.
145 நாடுகளின் ராணுவங்களை கிட்டத்தட்ட 60 காரணிகளின் கீழ் தீவிரமாக ஆய்வு செய்து இந்த தரவரிசையை குளோபல் ஃபையர்பவர் (GFP) வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசையில் பட்டியலில், சுமார் $761.7 பில்லியன் பட்ஜெட் உடன் அமெரிக்க ராணுவம் பலம் வாய்ந்த ராணுவமாக முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்
அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ரஷ்யா, மூன்றாவது இடத்தில் சீனா மற்றும் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்திய ராணுவத்தில் 5.94 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் உடன், கிட்டத்தட்ட 15 லட்சம் செயல்படும் ராணுவ வீரர்கள் உள்ளனர்.
அமெரிக்காவை தவிர ரஷ்யா, சீனா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ பட்ஜெட் கடந்த ஆண்டின் அளவிலேயே தக்க வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |