பிரித்தானிய கடற்கரையில் சிறுவன் கையில் கிடைத்த முதலாம் உலகப்போரின் உயிருள்ள கையெறிகுண்டு!
பிரித்தானிய கடற்கரையில் வெடிக்கக்கூடிய நிலையில் முதல் உலகப் போரின் வெடிகுண்டு ஒன்று சிறுவனால் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்து கடற்கரையில் ஒரு சிறுவன் சமீபத்தில் முதல் உலகப் போரில் பயன்படுத்திய கையெறி குண்டைக் கண்டுபிடித்தான்.
குல்ட்ரா கடற்கரையில் “வெடிக்கும் திறன் கொண்ட” கையெறி குண்டை கண்டறிந்த சிறுவன் வடக்கு அயர்லாந்தின் பொலிஸ் சேவையைத் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த ராணுவ தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், அது உலகப் போரின் “மில்ஸ் வெடிகுண்டு” கைக்குண்டு (Mills Bomb” hand grenade) என்பதை உறுதிப்படுத்தினார்.
பக்கிங்ஹாம் அரண்மனையை வாடகைக்கு எடுத்தால், எவ்வளவு செலவாகும் தெரியுமா?
பின்னர் அந்த கைக்குண்டு Crawfordsburn Country Park-கிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வெடிக்கப்பட்டது.
மேலும், “இது வெடிக்கும் திறன் கொண்ட உயிருள்ள கைக்குண்டு. கையெறி குண்டுகளை கண்டுபிடித்து பொலிசாரை எச்சரித்த அந்த இளைஞனுக்கு மிக்க நன்றி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி.” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தி இன்டிபென்டன்ட் படி , Mills Bomb வெடிகுண்டு என்பது 1915-ல் உருவாக்கப்பட்ட போது பிரிட்டனில் பெரிய அளவில் வெளியிடப்பட்ட முதல் கைக்குண்டு ஆகும்.
இது அரிதானது என்றாலும், முதலாம் உலகப்போர் (WWI) மற்றும் இரண்டாம் உலகப்போரில் (WW2) வெடிக்காத குண்டுகள் இன்னும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன.
தலையில் கை வைத்த சிறுவனை 13 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஒபாமா!
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நியூசிலாந்தில் உள்ள ஹாட் சிப்ஸ் தொழிற்சாலையில் கன்வேயர் பெல்ட்டில் இரண்டாம் உலகப் போர் காலத்து கையெறி குண்டு எடுக்கப்பட்டது.
2020-ஆம் ஆண்டில், மத்திய லண்டனில் உள்ள சோஹோவின் சில பகுதியில் வெடிக்காத WW2 வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டில், வைட் தீவின் கடற்கரையில் மீன்பிடி வலையில் 7 அடி ஜேர்மன் வெடிகுண்டு எடுக்கப்பட்டது, ஆனால் அது பின்னர் பாதுகாப்பாக வெடிக்கப்பட்டது.