மீண்டும் உலகப் போர்: புதிய திகதியை வெளியிட்ட இந்திய நாஸ்ட்ராடாமஸ்
இந்திய நாஸ்ட்ராடாமஸ் என தம்மை அறிமுகப்படுத்திவரும் நபர் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் நாள் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எந்த அறிகுறியும் தென்படவில்லை
ஏற்கனவே மூன்று முறை உலகப் போர் தொடங்கும் நாள் குறித்து திகதியை வெளியிட்டு, அது நிறைவேறாமல் போனது. தற்போது மீண்டும் உலகப் போர் குறித்த திகதிகளை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தியரான குஷால் குமார் என்பவர் உலக நகர்வுகள் தொடர்பில் கணிக்கும் ஜோதிடர் என தம்மை அறிமுகம் செய்து வருகிறார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் தொடர்பிலும், கொரியா நாடுகள் தொடர்பிலும், சீனா மற்றும் தைவான் தொடர்பிலும், ரஷ்யா மற்றும் நேட்டோ தொடர்பிலும் தமது கணிப்புகளை அவர் பதிவு செய்திருந்தார்.
ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளை எவர் வேண்டுமானாலும் கணிக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது உலகப் போர் குறித்து கணித்துள்ள குஷால் குமார், ஜூன் 18ல் போர் தொடங்கும் என்றார், ஆனால் அவ்வாறு எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதனையடுத்து ஜூலை மாதம் என்றார், இரண்டு திகதிகளையும் குறிப்பிட்டார். தற்போது ஜூலை மாதம் முடியப் போகிறது. இந்த நிலையில், ஆகஸ்டு 4 அல்லது 5ம் திகதி உலகப் போருக்கான அறிகுறிகள் தொடங்கும் என்ற கணிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
போருக்கான நெருக்கடி
மேலும், ஜூலை 24 மற்றும் 26ல் உலக நாடுகளில் நடந்த சம்பவங்கள் போருக்கான நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். இதனால் ஆகஸ்டு மாதம் 4 அல்லது 5ம் திகதி மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றார்.
தமது கணிப்புக்கு விளக்கமளித்துள்ள அவர், இரண்டு ரஷ்ய மற்றும் இரண்டு சீன குண்டுவீச்சு விமானங்கள் அலாஸ்கா அருகே பறந்துள்ளதாகவும், உக்ரைன் மற்றும் ரஷ்யா தொடர்பில் ருமேனியாவில் விவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் போர் தொடங்க இருப்பது கடலில் என்றும், ஆகாயம் அல்லது தரையில் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக குஷால் குமார் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |