உலகின் 10 பணக்கார குடும்பங்கள் - முகேஷ் அம்பானியின் இடம் என்ன?
ப்ளூம்பெர்க் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளவில் பணக்கார குடும்பங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.
பணக்கார குடும்பங்கள்
உலகின் 25 பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு $2.9 டிரில்லியன். நான்கு புதிய குடும்பங்கள் பணக்கார 25 பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அவற்றில் இரண்டு தென் அமெரிக்காவைச் சேர்ந்தவை.

மெக்சிகோவின் லாரியா மோட்டா வெலாஸ்கோ குடும்பம் மற்றும் சிலியின் லுக்ஸிக் குடும்பம். வால்மார்ட் இன்க் நிறுவனர்களான வால்டன் குடும்பம், கடந்த ஆண்டிலிருந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு, மீண்டும் அரை டிரில்லியன் டாலர்களுக்கு மேல் நிகர மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அம்பானியின் இடம்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஆளும் அல் நஹ்யான் குடும்பம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், சவுதி அரேபியாவின் அரச குடும்பமான அல் சவுத், 2024 இல் 6 வது இடத்திலிருந்து 2025 இல் 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அம்பானி குடும்பத்தின் நிகர மதிப்பு $105.6 பில்லியன்.
8வது இடத்தை பிடித்துள்ளது. தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர்.