ஆடம்பரத்தின் உச்சம்! உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பல் ரெடி
உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
'ஐகான் ஆஃப் தி சீஸ்'
இந்த கப்பலின் பெயர் Icon of the Seas, 365 மீட்டர் (சுமார் 1,200 அடி) நீளமும் 2,50,800 டன் எடையும் கொண்டது.
இந்த கப்பலில் உலகின் மிகப்பெரிய நீர் பூங்கா, 9 நீர்ச்சுழல்கள், 7 குளங்கள் மற்றும் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காக நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
Royal Caribbean International
கப்பலில் 5,610 பயணிகள் மற்றும் 2,350 பணியாளர்கள் என மொத்தம் 7,960 பேர் பயணிக்கலாம். 28 வகையான தங்குமிடங்கள் உள்ளன.
தனியாக பயணம் செய்பவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Royal Caribbean International
பின்லாந்து நிறுவனம்
ஐரோப்பாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான பின்லாந்தின் டர்குவில் உள்ள மேயர் டர்கு கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. இந்தக் கப்பல் அக்டோபரில் முழுமையாக ஏவப்பட்டு 2024 ஜனவரியில் தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும்.
இந்த கப்பல் ராயல் கரீபியன் பயண நெட்வொர்க்கில் சேர்க்கப்படும் என்று ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் தலைவரும் தலைமை நிர்வாகியுமான மைக்கேல் பெய்லி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Royal Caribbean International
முதல் கட்ட நீர் சோதனை
ஜூன் 22-ம் திகதிக்குள் முதல் கட்ட நீர் சோதனை முடிந்துவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
இன்ஜின், ஹல், பிரேக் சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றின் திறன் பல மைல்கள் பயணம் செய்து சரிபார்க்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Royal Caribbean International
இரண்டாம் கட்ட சோதனைகளும் 2023 இறுதிக்குள் நிறைவடையும். அதன்பிறகு 2024 ஜனவரியில் முதல் பயணத்தை தொடங்கும் என அறிவிப்பட்டுள்ளது.
'ஐகான் ஆஃப் தி சீஸ்' - உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என்ற முத்திரையைக் கொண்டிருக்கும்.
Royal Caribbean International
World’s largest cruise ship, Icon of the Seas, Finland, Luxurious Ship Travel
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |