பூமியில் வாழ்ந்த மிக நீளமான ராஜநாகம்
ராஜநாகம் (King Cobra) உலகின் மிக நீளமான விஷம் கொண்ட பாம்பாகும்.
இது பொதுவாக 10 முதல் 15 அடி வரை நீளமுடையதாகா காணப்படுகிறது.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஈர நிலங்களில் வாழும் இந்த பாம்பு, பல கலாச்சாரங்களில் கடவுளாக மதிக்கப்படுகிறது.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி, இதுவரை பதிவான மிக நீளமான ராஜநாகம் 1937-ஆம் ஆண்டு மலேசியாவின் Negeri Sembilan பகுதியில் பிடிக்கப்பட்டது.
அடுத்த 2 ஆண்டுகளில் 5.71 மீற்றர் (18 அடி 8 அங்குலம்) நீளத்திற்கு வளர்ந்தது. பின்னர் இது லண்டன் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
ஆனால், இரண்டாம் உலகப் போரின்போது பூங்கா தாக்கப்படலாம் என்ற பயத்தில், மக்களின் பாதுகாப்பிற்காக விஷம் கொண்ட பாம்புகளை அழிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த பாம்பு Naja வகையைச் சேர்ந்த உண்மையான கோப்ரா அல்ல. இது Ophiophagus என்ற வகையைச் சேர்ந்தது. அதாவது பாம்புகளை உண்பவன் என பொருள்.
இதன் உணவுகளில் மற்ற விஷப்பாம்புகளும், அதில் சில சமயம் ராஜநாகமும் அடங்கும்.
பெண் ராஜநாகம் தன்முட்டையளை பாதுகாக்க இலைகள், மண் மற்றும் செடிகளை கொண்டு மேடான நிலத்தில் கூடுகட்டும். மனிதர்களை தவிர்க்கும் இயல்புள்ள இந்த பாம்பு, ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே தாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
longest king cobra ever, 18-foot king cobra Malaysia, Guinness record venomous snake, king cobra London Zoo WWII, Ophiophagus hannah facts, snake eater genus king cobra, Southeast Asia king cobra, largest venomous snake history