உலகின் துன்பமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் எந்த நாடு? சிக்கலில் இலங்கை
உலகின் துன்பமான நாடுகளின் பட்டியலை, புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கே வெளியிட்டுள்ளார்.
உலகின் துன்பமான நாடுகள் பட்டியல்
உலகின் துன்பமான நாடுகளின் பட்டியலை, புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கே, தனது வருடாந்திர கணக்கிட்டின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பட்டியலின் படி ஜிம்பாவே, உலகின் துன்பமான நாடாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் பொருளாதார சிக்கல் தான் காரணமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
மொத்தமாக 157 நாடுகளை ஆய்வு செய்த பிறகு, இந்த பட்டியலை உருவாக்கியதாக ஸ்டீவ் ஹான்கே கூறியுள்ளார். துன்ப குறியீடு என்பது குறிப்பிட்ட நாடுகளில் ஏற்படும் வறுமை, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வங்கி கடன் ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படுகிறது.
சிக்கலில் பாகிஸ்தான், இலங்கை
அதன் அடிப்படையில் பார்த்தால் ஜிம்பாவே தவிர, வெனிசுலா, சிரியா, லெபனான் மற்றும் சூடான் போன்ற நாடுகள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளன.
@reuters
சிரியாவின் துயரத்திற்கு அந்நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் என தெரிகிறது. அதனை தவிர மற்ற நாடுகள் பணவீக்கத்தால் துன்ப நாடுகளாக பார்க்கப்படுகிறது.
மேலும் அர்ஜெண்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹெட்டி, அங்கோலா, டோங்கா, மற்றும் கானா ஆகியவை முதல் 15 இடங்களில் உள்ள மற்ற நாடுகளாகும்.
@ap
இலங்கையில் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்டு வரும் பணவீக்கத்தால், அந்நாட்டு மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி
இந்த பட்டியலில் முக்கியமாக பாகிஸ்தான் 35வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டில் தற்போதுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிதான் என தெரிகிறது.
@news18
இந்தியா பட்டியலில் 103வது இடம் பிடித்துள்ளது, ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருந்தாலும் கூட, இந்தியாவில் இன்னும் அடித்தட்டு மக்கள், பல பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் குறைவான துன்ப நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து 157வது இடத்தை வகிக்கிறது.
குவைத் 156வது இடத்திலும், ஜப்பான் 154வது இடத்திலும், தாய்லாந்து 150வது இடத்திலும் முறையே குறைவான துன்ப நாடுகளாக பட்டியலில் இடம் பிடித்துள்ளன.