காய்ச்சலுக்கு ஊசி போட்ட குழந்தை திடீர் மரணம்! நடந்தது என்ன?
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் தவறான சிகிச்சையால் 4 வயது குழந்தை மரணமடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர் மற்றும் ராஜஸ்ரீ, இவர்களது 4 வயது மகள் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
திவ்யா காய்ச்சலால் அவதிப்பட, கடந்த 13-ஆம் திகதி காடாம்புலியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் குழந்தைக்கு சிகிச்சைக்காக ஊசி போட்ட சிறிது நேரத்தில், உடலில் புண்கள் உருவாகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையின் மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவரை கைது செய்யக்கோரி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு அதிகரித்தது.
இதனையடுத்து குழந்தை மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியதும் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து விசாரணை நடத்த மருத்துவத்துறைக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |