சீனாவின் கோவிட் கால வுஹான் ஊரடங்கு கொடுமைகளை அம்பலப்படுத்திய பெண் குறித்து புதிய தகவல்
சீனாவில் கோவிட் தொடக்க நாட்கள் தொடர்பில் வுஹான் நகரில் இருந்தே அம்பலப்படுத்திய பொதுமக்கள் ஊடகவியலாளரை சிறையில் இருந்து விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வுஹான் ஊரடங்கு கொடுமைகள்
வுஹான் ஊரடங்கு கொடுமைகள் தொடர்பில் அம்பலப்படுத்தியதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். தற்போது அவரை விடுவிக்க சீன நிர்வாகம் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் Zhan Zhang எப்போது விடுவிக்கப்படுவார் என்ற தகவலை அரசாங்கம் இதுவரை உறுதி செய்யவில்லை என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவிட் ஊரடங்கு மற்றும் அது தொடர்பில் சீன நிர்வாகத்தின் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்திய பல சமூக ஆர்வலர்களில் 40 வயதாகும் முன்னாள் சட்டத்தரணியான Zhan Zhang என்பவரும் ஒருவர்.
இதில் சிலர் கைதாகினர், எஞ்சியவர்கள் அடையாளம் தெரியாமல் மாயமாகினர். Zhan Zhang மீது மக்களிடையே சண்டைகளை மூட்டியது மற்றும் பிரச்சனையைத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.
ஷாங்காய் பகுதியில் தங்கியிருந்த Zhan Zhang கடந்த 2020 பிப்ரவரி மாதம் வுஹான் நகருக்கு பயணமாகியுள்ளார். வுஹான் தெருக்களில், மருத்துவமனைகளில் அவர் பார்த்தவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்தினார்.
அவரது நேரலைகள், கட்டுரைகள் என அனைத்தும் சமூக ஊடகங்களில் தீயாக பரவியது. அதிகாரிகளின் நெருக்கடிக்கு அஞ்சாமல், தொடர்ந்து நேரலைகளையும் கட்டுரைகளையும் பதிவு செய்தார்.
உண்ணாவிரத போராட்டத்தில்
2020 மே மாதம் 14ம் திகதி அவர் திடீரென்று மாயமாகும் வரையில் தமது சமூக ஊடக பக்கங்கள் மற்றும் YouTube Channel-ல் 100க்கும் மேற்பட்ட காணொளிகளை அவர் பதிவேற்றியிருந்தார்.
மே 15ம் திகதி Zhan Zhang கைதாகியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். அதே ஆண்டு நவம்பர் மாதம் அவர் மீது வழக்குப் பதியப்படு, அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.
கைதான முதல் சில மாதங்கள் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் அவருக்கு குழாய் ஊடாக உணவளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
2023 ஜூலை மாதம் அவரது உடல் எடை 37 கிலோவுக்கு சரிவடைந்ததாக தகவல் கசிந்தது. அத்துடன் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளாலும் அவர் அவதிக்குள்ளானார்.
வுஹான் தொடர்பில் அவரது காணொளிகள் அனைத்தும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவை என்றே கூறப்படுகிறது. தற்போது, Zhan Zhang விடுவிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியானாலும், எப்போது என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |