உக்ரைன் போருக்கு மத்தியில்... முதல் முறையாக ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் சந்திப்பு!
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நேரில் சந்திப்பு.
கோவிட் தொற்றுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்.
உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டிக்காத சீனா, ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவின் நடவடிக்கையை போர் என்று அறிவிக்காமல், சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே அழைத்து வந்தது.
மேலும் உள் நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகள், வெளிநாடுகளில் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் அதிகரித்து வரும் இறுக்கமான உறவுகள் ஆகியவற்றிக்கு இடையே ”வரம்புகள் அற்ற” நட்புறவினை ரஷ்யாவும் சீனாவும் அறிவித்தனர்.
photo: Alexander Zemlianichenko
அத்துடன் சீனாவிற்கு விற்கப்படும் ரஷ்ய எரிவாயுவிற்கான பணப் பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரஷ்யா பணமான ரூபிள்(roubles) மற்றும் சீன பணமான யுவானில்(yuan) 50-50 என்ற விகிதாசாரத்தில் நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி புடின்(Vladimir Putin) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில் அறிவித்தார்.
இந்த நிலையில் கோவிட் தொற்று தொடங்கியதில் இருந்து வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்(Xi Jinping) கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு உஸ்பெகிஸ்தானில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பங்கேற்கவுள்ளார்.
photo: Alexei Druzhinin/Sputnik/Kremlin via Reuters
இவற்றில் முக்கிய அம்சம் என்னவென்றால் உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் நேரில் ஒருவரை ஒருவர் மாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான கனேடிய காதலி...குத்திக் கொன்ற பிரித்தானிய இளைஞர்!
இதனை சீனாவிற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரி டெனிசோவ் (Andrey Denisov) செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார் என ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் Tass தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.