காருக்குள் நெருக்கமாக இருந்த இளம்ஜோடி: பொது இடத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனை
இந்தோனேசியா நாட்டில், கார் ஒன்றிற்கு நெருக்கமாக இருந்த இளம்ஜோடி ஒன்றிற்கு சவுக்கடி கொடுக்கப்பட்டது. அடியால் வலி தாங்காமல் சுருண்டு விழுந்தார் அந்த இளம்பெண்.
திருமணமாகாத ஜோடி முத்தமிட்டுக்கொள்வதைக் கண்ட பொலிசார்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அசைவதைக் கவனித்த பொலிசார் ஒருவர் அருகே சென்று பார்த்துள்ளார்.
காருக்குள் ஒரு 24 வயது ஆணும், 23 வயது பெண்ணும் முத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் கண்ட அவர் உடனடியாக மற்ற அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார்.
Image: HOTLI SIMANJUNTAK/EPA-EFE/REX/Shutterstock
பயங்கர தண்டனை
இந்தோனேசியாவில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது சட்டப்படி குற்றம் ஆகும்.
Image: AFP via Getty Images
ஆகவே, காருக்குள் நெருக்கமாக இருந்த அந்த இருவருக்கும் தண்டனையாக 25 சவுக்கடிகள் கொடுப்பது என தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனையை நிறைவேற்றும்போது, வலி பொறுக்கமுடியாமல் அந்தப் பெண் சுருண்டு விழுந்தார். அதைத் தொடர்ந்து, இருவருக்கும் 21 சவுக்கடிகள் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
Image: HOTLI SIMANJUNTAK/EPA-EFE/REX/Shutterstock
இஸ்லாமிய சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் இந்தோனேசியாவில், மது அருந்துவது, சூதாடுவது, திருமணத்துக்கு முன் நெருக்கமாக இருப்பது போன்ற குற்றங்களுக்கு சவுக்கடி தண்டனையாக கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Image: HOTLI SIMANJUNTAK/EPA-EFE/REX/Shutterstock