சிறப்பு பூஜை செய்ய ஆற்றில் இறங்கிய மருத்துவர்..அடுத்து நேர்ந்த துயரம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் அரசு மருத்துவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
கோயிலுக்கு சென்ற மருத்துவர்
கர்நாடக மாநிலம் Holenaraseepurயின் கெரகோடுவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (31). அரசு மருத்துவரான இவர், கடந்த 14ஆம் திகதி ஹேமாவதி காயல் கோயிலுக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள ரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்ற அவர் மாலை 5 மணி ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் பதறிப் போன அவரது குடும்பத்தினர் கோரூர் பொலிஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே பொலிஸார் சந்திரசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவரது ஆடைகள் ஆற்றின் அருகே கிடந்தது.
எனவே சந்திரசேகர் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகமடைந்த பொலிஸார், உள்ளே இறங்கி தீவிரமாக தேடினர்.
சடலமாக மீட்பு
ஆற்றில் சந்திரசேகரின் உடல் மிதந்து கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார், அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில் அவர் கால்தவறி ஆற்றில் விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சந்திரசேகர் ஆண்டிற்கு ஒருமுறை ஹேமாவதி ஆற்றில் சிறப்பு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |