திருமணமான 2 மாதத்தில் மாரடைப்பால் 25 வயது மணமகன் மரணம்! அதிர்ச்சியில் புதுப்பெண் விபரீத முடிவு
இந்தியாவின் டெல்லி நகரில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததால், அதிர்ச்சியில் மனைவி தனது உயிரை மாய்த்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இளம் தம்பதி
உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த புதுமணத்தம்பதி அபிஷேக் - அஞ்சலி. கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி இவர்கள் திருமண செய்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு செல்ல இந்த ஜோடி முடிவு செய்துள்ளது. அதன்படி இருவரும் மிருகக்காட்சி சாலைக்கு வருகைபுரிந்தனர்.
அங்கு திடீரென அபிஷேக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன அஞ்சலி தனது நண்பர்களை அழைத்துள்ளார்.
புதுப்பெண் விபரீத முடிவு
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிஷேக் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அபிஷேக்கின் உடல் அல்கான் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கணவரின் மரணத்தினால் மனமுடைந்து காணப்பட்ட அஞ்சலி விபரீத முடிவை எடுத்துள்ளார். குடியிருப்பின் 7வது மாடி பால்கனிக்கு சென்ற அவர், அங்கிருந்து கீழே குதித்துள்ளார். உடனடியாக படுகாயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அஞ்சலி உயிரிழந்தார். கணவரின் இறப்பினால் அடுத்த 24 மணிநேரத்தில் இளம் மனைவியும் உயிரை மாய்த்துக்கொண்டது இருவரின் குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |