இத்தாலியில் வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் மகளை காப்பாற்றிய இளைஞர்கள்! வைரலாகும் வீடியோ
இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் மகளை, இளைஞர்கள் காப்பாற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்தாலியில் வெள்ளம்
இத்தாலியில் கடந்த சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
@reuters
இதனை தொடர்ந்து மீட்பு பணியினர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடங்களில், சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
@reuters
இந்நிலையில் இத்தாலியின் செசினா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால், தெருக்களில் கழுத்து வரை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வைரலாகும் வீடியோ
இதனிடையே தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் வீட்டிற்கு வெளியே நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், ஒரு பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
அப்போது அவர்களுக்கு எதிர் திசையில் நின்றிருந்த இளைஞர்கள், தங்களது உயிரை பணயம் வைத்து, நீரில் நீந்தி சென்று தாய் மற்றும் மகளை காப்பாற்றியுள்ளனர்.
இத்தாலியில் கடுமையான வெள்ளப் பெருக்கு உண்டாகி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவை பார்த்த அனைவரும் இளைஞர்களின் தீர செயலை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வீடியோவை 90 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.