மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு... நூலிழையில் தப்பிய உக்ரைன் ஜனாதிபதி: பெண் ஒருவரின் சதி அம்பலம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீண்டும் ஒரு படுகொலை திட்டத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெலென்ஸ்கியின் வருகை
பெண் ஒருவரை உக்ரைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ள நிலையில், சதித் திட்டம் அம்பலமாகியுள்ளது.
Photograph: Ukraine's Security Services
பெயர் வெளிப்படுத்தப்படாத அந்த பெண், உக்ரைன் ஜனாதிபதியின் நகர்வுகளை, சந்திக்கும் நபர்களை, செல்லும் பகுதிகளை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார்.
தெற்கு மைகோலேவ் பகுதிக்கு ஜெலென்ஸ்கியின் வருகை பற்றி தகவல் தெரிவித்த நிலையில், ரஷ்யா அப்பகுதியில் ஒரு பெரிய வான்வழி தாக்குதலை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், துரோகிகளுக்கு எதிராகவும் உக்ரைன் போரிடும் என ஜெலென்ஸ்கி தமது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதலானது ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்யும் உக்ரைனின் திட்டம் என்றே ரஷ்யா கூறி வருகிறது.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய நாட்களில், தமது மரணத்தை புடின் விரும்புகிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.
அதிர்ஷ்டவசமாக தப்பிய ஜெலென்ஸ்கி
மட்டுமின்றி, வாக்னர் குழுவைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட ரஷ்ய கூலிப்படையினர் பிப்ரவரி 2022ல் ஜெலென்ஸ்கியைக் கொல்ல கிய்வில் களமிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
@reuters
அதே வேளை, ஒரே வாரத்தில் மூன்று படுகொலை சதி திட்டத்தில் இருந்து ஜெலென்ஸ்கி அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும் உக்டைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் அம்பலப்படுத்தியிருந்தனர்.
மட்டுமின்றி, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் பத்துக்கும் மேற்பட்ட முறை படுகொலை செய்ய சதி நடந்துள்ளது. தற்போதும், ஜெலென்ஸ்கி மீதான தாக்குதல் திட்டம் குறித்து, அறியவந்த உக்ரைன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள், உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணின் முகம் மறைக்கப்பட்ட புகைப்படங்களை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். குறித்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |