அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் ஒத்திவைத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெலென்ஸ்கி ஒத்திவைத்துள்ளதாக
உக்ரைன் மீதான தாக்குதலை சமீப நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. Kharkiv பிராந்தியத்தில் மேலும் இரண்டு குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அத்துடன் Zaporizhzhia பிராந்தியத்தில் ஒரு குடியிருப்பு பகுதியையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
Kharkiv பிராந்தியத்தில் தற்போது Hlyboke மற்றும் Lukiantsi பகுதிகள், Zaporizhzhia பிராந்தியத்தில் Robotyne பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் பயணங்களை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, இந்த நாடுகளில் முன்னெடுக்கவிருக்கும் பயணங்கள் தொடர்பில் உரிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விமான நிலையங்கள்
இதனிடையே, ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு முக்கிய விமான நிலையங்களை ரஷ்யா மூடியுள்ளது. உக்ரேனியப் படைகள் சமீபத்திய வாரங்களில் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
அத்துடன், ரஷ்யாவுக்குள் தாக்குதலை முன்னெடுக்கவும் முயன்று வருகிறது. இதனிடையே, உக்ரைன் ட்ரோன் தாக்குதலை முறியடித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |