ரஷ்யா நடத்துவது பயங்கரவாத தாக்குதல்! மக்கள் அவர்களின் இலக்கு.. பரபரப்பு குற்றச்சாட்டு வீடியோவை வெளியிட்ட ஜெலென்ஸ்கி
எங்களுக்கு பீதியையும், குழப்பத்தையும் கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள் என உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு
ரஷ்ய படையின் முதல் இலக்கு உக்ரைனின் ஆற்றல் அமைப்பு எனவும், இரண்டாவது இலக்கு மக்கள் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்
ரஷ்யா நடத்துவது பயங்கரவாத தாக்குதல் எனவும், நாங்கள் பயப்பட வேண்டும் என நினைக்கிறார்கள் எனவும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனின் கீவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கோரமாக தாக்கி வருகின்றன. இந்த தாக்குதலில் 75 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டை ரஷ்யா மீது வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
'நங்கள் பயங்கரவாதிகளை எதிர்கொண்டிருக்கிறோம். டஜன் கணக்கான ஏவுகணைகளையும், ஈரானிய ஷஹீத் ட்ரோன்களையும். அவர்களுக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. உக்ரைனின் எரிசக்தி ஆற்றல் வளங்கள்.
எங்களுக்கு பீதியையும், குழப்பத்தையும் கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். நம்பிக்கையற்ற அவர்கள் எங்கள் ஆற்றல் அமைப்பை அழிக்க விரும்புகிறார்கள். ரஷ்யாவின் இரண்டாவது இலக்கு மக்கள். குறிப்பாக அவர்கள் தேர்ந்தெடுத்த நேரம், முடிந்தவரை அதிக சேதத்தை ஏற்படுத்துகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
?? Volodymyr Zelensky also called #Russia's strikes across Ukraine "terrorism".
— FRANCE 24 English (@France24_en) October 10, 2022
He said Moscow's forces have two targets: Ukrainian energy sources and people.
"They want panic and chaos." ⤵️ pic.twitter.com/XPL8ttQfJz