பாக்முட் முழுவதையும் சூறையாடிய ரஷ்யாவின் வாக்னர் படை: பாராட்டிய விளாடிமிர் புடின்
ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைனின் பாக்முட் கைப்பற்ற பின்பு, வாக்னர் படையினரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார்.
பாக்முட்டை கைப்பற்றிய ரஷ்யா
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முட்டை கைப்பற்றது முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.
ஏனெனில் பாக்முட் நகரை கைப்பற்றுவதன் மூலம் உக்ரைன் நாடுகளின் மற்ற பகுதிகளுக்கு எளிமையாக நுழைந்து விட முடியுமென ரஷ்யா நம்பியது.
@reuters
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக, பாக்முட் நகரின் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தியது, ரஷ்யாவின் கூலி ராணுவப்படையான வாக்னர் படை தொடர்ந்து பாக்முட்டின் எல்லைகளை கைப்பற்றியது.
@telegram
இந்நிலையில் நேற்று வாக்னர் படை தலைவர் பாக்முட்டை முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக, அதிகாரப்பூர்வமாக டெலிகிராம் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜி 7 நாடுகளுடனான சந்திப்பிற்கு சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஜெலென்ஸ்கி, பாக்முட் முழுவதுமாக ரஷ்யாவின் வாக்னர் படையினரின் கைக்கு சென்றுவிட்டது என கூறியுள்ளார்.
@reuters
கடந்த 8 மாத காலமாக பாக்முட்டை கைப்பற்ற நடைபெற்ற சண்டை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாக்முட் நகர் முழுவதையும் ரஷ்ய ராணுவம் சூறையாடுகிறது, என ஜெலென்ஸ்கி ஜி 7 மாநாட்டில் பேசும் போது வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.பாக்முட் எங்கள் நாட்டின் இதயம் போன்றது, ஆனால் அது இப்போது எங்களிடமில்லை என ஜெலென்ஸ்கி மனமுறுக பேசியுள்ளார்.
@telegram
பாராட்டிய புடின்
இந்நிலையில் ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட கிரெம்ளினில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது.
அதில் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமீர் புடின் வாக்னரின் தாக்குதல் பிரிவுகளுக்கும், அவர்களுக்கு தேவையான ஆதரவையும் வழங்கிய ரஷ்ய ஆயுதப் படைகளின் அனைத்துப் படைவீரர்களையும் வாழ்த்தினார். ஆர்டெமோவ்ஸ்கை விடுவிப்பதற்கான நடவடிக்கை (பாக்முட்டின் சோவியத் காலப் பெயர்)' வரலாற்று சிறப்புமிக்கது எனவும் கூறியுள்ளார்.
மேலும் போர் இதனோடு முடிந்து விடவில்லை இன்னும் நாம் உக்ரைனை முழுவதுமாக கைப்பற்ற வேண்டி இருக்கிறது என விளாடிமிர் புடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.