ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் வேண்டும்! ஜெலென்ஸ்கி கோரிக்கை
ரஷ்யா மீது கூடுதலான பொருளாதார தடைகள் வேண்டும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
கீவ் மீது வான்வழித் தாக்குதல்
உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் 2 குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்யா நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு உயரமான குடியிருப்பு கட்டிடங்கள் முழுமையாக சேதமடைந்து இருப்பதுடன் பல இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த கட்டிடங்களின் மேல் தளத்தில் இருந்து கிட்டத்தட்ட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மாநில அவசர கால சேவைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
இந்நிலையில் பொதுமக்களின் வாழ்க்கையை சேதப்படுத்தும் நோக்கத்துடன் ரஷ்யா தொடர்ந்து இத்தகைய தாக்குதலை முன்னெடுத்து வருவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கையை தடுக்கும் முயற்சியாக கூடுதலாக பொருளாதார நடவடிக்கைகள் ரஷ்யா மீது விதிக்கப்பட வேண்டும் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் அனைவர் மீதும் கூடுதல் வரி மற்றும் பொருளாதார தடைகள் வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |