தீமையை ஒன்றாக எதிர்த்து போராடுகிறோம்! நாங்கள் நிச்சயம் வெல்வோம்..உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சூளுரை
கேட்டின் படுகொலையை ஒப்பிட்டு ரஷ்யா தற்போது தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கேட்டின் படுகொலை
இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் யூனியனால் போலந்து ராணுவ அதிகாரிகளுக்கு வெகுஜன மரண தண்டனை கொடுக்கப்பட்டது. இது கேட்டின் படுகொலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த படுகொலை சம்பவம் தெரிய வந்ததைத் தொடர்ந்து, போலந்து மற்றும் சோவியத் யூனியன் இடையே இராஜதந்திர உறவுகள் துண்டிக்கத் தூண்டியது. இந்நிலையில் கேட்டின் படுகொலை குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
@AFP
ஜெலென்ஸ்கி சூளுரை
அவரது ட்விட்டர் பதிவில், 'இன்று சகோதரத்துவ போலந்து மக்களுடன் துக்கத்தில், கேட்டின் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் நினைவு என்றும் நிலைத்திருக்கட்டும்!
83 ஆண்டுகளுக்கு முன்பு போலவே, மாஸ்கோ சர்வாதிகார ஆட்சி தொடர்ந்து கொலை மற்றும் சித்திரவதை செய்கிறது. நாங்கள் போர்க்களத்தில் இந்த தீமையை ஒன்றாக எதிர்த்துப் போராடுகிறோம், நாங்கள் நிச்சயமாக வெல்வோம்!' என தெரிவித்துள்ளார்.
@AP