79 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ரஷ்யா செய்த மோசமான செயல்: உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
கிரிமியன் டாடர் மக்கள் நாடு கடத்தப்பட்ட 79வது ஆண்டு நிறைவை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நினைவுபடுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.
கிரிமியன் டாடர் இன மக்கள்
2014ஆம் ஆண்டு உக்ரைனில் இருந்து கிரிமியாவை ரஷ்யா இணைத்ததை கிரிமியன் டாடர் இன மக்கள் எதிர்த்தனர். அவர்கள் இப்போது மாஸ்கோவினால் நிறுவப்பட்ட அதிகாரிகளால் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், மே 18, 2023 ஆன இன்றைய தினத்தை சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் கீழ் நாடு கடத்தப்பட்ட 79வது ஆண்டின் நிறைவை கிரிமியன் டாடர் மக்கள் குறிக்கின்றனர்.
ஆனால், ரஷ்ய அதிகாரிகள் கிரிமியன் டாடர் இன சிறுபான்மையினரை எச்சரித்ததாக Crimean Solidarity குழு தெரிவித்துள்ளது.
Alexei Pavlishak / TASS
ஜெலென்ஸ்கியின் பதிவு
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 79வது ஆண்டு நினைவு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், 'இந்த ஆண்டு இரண்டு அர்த்தமுடைய விடயங்களும் மே 18ஆம் திகதி அன்று ஒரு திகதியில் இணைக்கப்பட்டுள்ளன. 79 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், சோவியத் ஆட்சியானது கிரிமியன் டாடர் மக்களை நாடு கடத்த தொடங்கியது. அந்த மக்கள் அழிக்கப்பட வேண்டியது விருப்பமாக இருந்தது. அவர்களின் வீடுகள் பறிக்கப்பட்டது, வாழ்வதற்கான உரிமை பறிக்கப்பட்டது. ஆனால், அந்த மக்கள் உயிர்பிழைத்தார்கள். அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்!
இன்று, நான் உக்ரேனிய மற்றும் கிரிமியன் டாடர் மக்களின் ஒற்றுமையைக் குறிக்கும் அணிகலன்களுடன் ஒரு சிறப்பு Vyshyvankaவை அணிந்திருக்கிறேன். எங்கள் வலிமை சின்னங்கள் மற்றும் எங்கள் விருப்பம் எங்கள் வீட்டில் வாழ்வது தான்.
இந்த ஆண்டு உக்ரைனின் Vyshyvanka தினம், நம் மக்கள் என்ன அனுபவித்தார்கள், நமது கலாச்சாரம் எவ்வளவு வலிமையானது என்பதை நினைவூட்டுவதாக இருக்கட்டும். நாங்கள் எங்கள் மக்களையும், அவர்களின் வலிமை மற்றும் கலாச்சாரத்தை மதிக்கிறோம்!' என கூறியுள்ளார்.
This year, the two meanings are united by one date, May 18.
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 18, 2023
79 years ago on this day, the Soviet regime began deporting the Crimean Tatar people. A people they wanted to erase. Deprive of their homes, deprive of the right to life.
But the people survived. And they will live… pic.twitter.com/PDgX56ST7s