298 பேருடன் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்! அந்த சோகம் மறக்க முடியாதது..ஜெலென்ஸ்கி உருக்கமான பதிவு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி MH17 விமான விபத்தில் பலியானவர்கள் குறித்து நினைவுகூர்ந்துள்ளார்.
மலேசிய விமானம்
கடந்த 2014ஆம் ஆண்டு சூலை 17யில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான MH17 ஏவுகணை தாக்குதலில் சுட்டுவீழ்த்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் உட்பட 298 பேரும் கொல்லப்பட்டனர்.
ரஷ்ய ஏவுகணை இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தங்களுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ரஷ்யா தெரிவித்தது.
எனினும் விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என அறிய சர்வதேச அளவில் கூட்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.
Getty Images
ஜெலென்ஸ்கி உருக்கம்
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'இன்று MH17யில் பலியானவர்களின் நினைவை உக்ரைன் போற்றுகிறது. உயிரிழந்த 298 பேரில் ஒவ்வொருவரின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்களும், இதயங்களும் உள்ளன. ஆக்கிரமிப்பாளார் ஏற்படுத்திய இந்த சோகம் என்றும் மறக்க முடியாதது. படையெடுக்கும் பயங்கரவாத அரசு உக்ரைனில் செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
Today, ?? honors the memory of the victims of #MH17. Our thoughts and hearts are with the families and loved ones of each and every one of the 298 victims. This tragedy caused by the aggressor will never be forgotten. The invading state, the terrorist state will be held fully…
— Володимир Зеленський (@ZelenskyyUa) July 17, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |