வெறுங்கையுடன் வெளியேறிய ஜெலென்ஸ்கி! ரஷ்யாவுக்கு எதிராக நேச நாடுகளை வலியுறுத்தல்
அமெரிக்க பயணத்திற்குப் பிறகு, ரஷ்யாவை சமாதானப்படுத்துவதை எதிர்த்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேச நாடுகளை வலியுறுத்துகிறார்.
ஏவுகணைக்கான சந்திப்பு
டோமாஹாக்கிற்காக அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு பயணித்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) வெறுங்கையுடன் வெளியேறினார்.
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடந்த வார காஸா அமைதி ஒப்பந்தத்தின் பின்னணி ஒரு புதிய இராஜதந்திர முன்னேற்றத்தைக் கண்டபோது ஜெலென்ஸ்கி அவரை சந்தித்தார்.
அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி
பின்னர் அவர், "பயங்கரவாதிகளின் குற்றங்களுக்கு உக்ரைன் ஒருபோதும் எந்த வெகுமதியையும் வழங்காது. மேலும் இந்த நிலைப்பாட்டை நிலைநிறுத்த எங்கள் கூட்டாளிகளை நாங்கள் நம்புகிறோம்" என பதிவிட்டார்.
மேலும், உக்ரைனின் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளிடம் இருந்து தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி, ரஷ்யாவை சமாதானப்படுத்துவதை எதிர்த்து நட்பு நாடுகளை வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |