உக்ரைன் போரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் உக்ரைன் ஜனாதிபதி ஆற்றிய உரை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் ஓராண்டு முடிகிறது. இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும் ஏவுகணைகள் வந்து விழலாம் என்ற சூழலிலும் தன் நாட்டு வீரர்கள் முன் உரையாற்றினார் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
2023 வெற்றியின் ஆண்டாக இருக்கும்
தன் நாட்டு வீரர்கள் முன் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, 2023 வெற்றியின் ஆண்டாக இருக்கும் என சூளுரைத்தார்.
வேதனையும் துயரமும் மட்டுமின்றி, நம்பிக்கையும் ஒற்றுமையும் கொண்ட ஆண்டில், துணிச்சலான உக்ரைனியர்கள் தங்களை நிரூபித்துக்காட்டியுள்ளார்கள் என்றார் அவர்.
பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, நம்மில் இலட்சக்கணக்கானோர் துணிந்து நின்று போரிட முடிவு செய்தோம்.
AP
இந்த ஆண்டு நம்மை யாரும் வெல்லமுடியவில்லை, 2023 நமது வெற்றியின் ஆண்டாக அமையும் என்றார் அவர்.
ரஷ்யக் கொலைகாரர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை பெறும் வரை நாம் ஓயமாட்டோம் என்றார் ஜெலன்ஸ்கி.
தலைநகர் கீவ்வில் நெகிழ்ச்சியும் கண்ணீருமாக நிகழ்ந்த அந்த நிகழ்ச்சியில், வீரதீர செயல்கள் புரிந்த தன் வீரர்களுக்கு ஜெலன்ஸ்கி விருதுகளை வழங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.