அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது! ரஷ்யா மீண்டு வர பல தலைமுறைகள் ஆகும்... ஜெலன்ஸ்கி முக்கிய தகவல்
அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் வந்துவிட்டது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 24வது நாளாக நீடிக்கிறது. பொதுமக்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களும் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு இலக்காவதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது, இல்லையெனில் போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷ்யா மீண்டு வர பல தலைமுறைகள் எடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இதன்மூலம் போர் தாக்கத்தின் முக்கியத்துவத்தை ஜெலன்ஸ்கி உணர்த்துவதாக தெரியவந்துள்ளது.
இதனிடையில் போர் அச்சம் காரணமாக மரியுபோல் நகரில் இருந்து மனிதாபிமான வழித்தடங்கள் வழியே 4,972 பேர் வெளியேறி உள்ளனர்.
இதில் 1,124 பேர் குழந்தைகள் என்று உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.