ஒடிசா ரயில் விபத்து.. அவர்களின் வலியை பகிர்ந்து கொள்கிறோம்! உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல்
இந்தியாவின் ஒடிசாவில் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரின் வலியைப் பகிர்ந்து கொள்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒடிசா கோர விபத்து
ஒடிசா ரயில் விபத்து தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, உலகளவில் இருந்தும் தலைவர்கள் தங்கள் இரங்கலையும், சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்த நிலையில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இச்சம்பவம் குறித்து இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
AFP-JIJI
ஜெலென்ஸ்கியின் இரங்கல்
அவரது பதிவில், 'எனது சார்பாகவும், உக்ரைன் மக்கள் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்கிறோம். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்' என கூறியுள்ளார்.
On behalf of myself and the people of Ukraine, I express my deepest condolences to Prime Minister @narendramodi and all relatives and friends of those killed in the train accident in the state of Odisha. We share the pain of your loss. We wish a speedy recovery for all those…
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 3, 2023
இதற்கிடையில் தற்போது வரை ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்துள்ளார்.
18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
File photo