ரஷ்யாவுக்கு எதிரான போரில் உலகம் வெல்லும்: நம்பிக்கையுடன் கூறும் ஜெலென்ஸ்கி
தற்போது ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நிச்சயம் வெல்லும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வான்வழி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள இரத்தம் ஏற்றும் மையத்தின் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.
ரஷ்ய எல்லையில் இருந்து சில டஜன் கிலோமீற்றர் தொலைவில் உள்ள குபியன்ஸ்க் நகரின் மையத்தை வழிகாட்டப்பட்ட வான்குண்டு தகர்த்தது என அவர் தெரிவித்தார்.
File image of Ukrainian President Volodymyr Zelenskyy
உலகம் வெல்லும்
இந்த நிலையில் ஜெலென்ஸ்கி இன்று வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், 'இந்தப் போரில் உக்ரைன் வெற்றி பெறும். இந்தப் போரை உலகம் வெல்லும். உண்மை இந்தப் போரில் வெற்றி பெறும்.
முக்கிய விடயம் என்னவென்றால், உக்ரைனில் உள்ள நம் அனைவருக்கும் மற்றும் உலகில் உள்ள சாதாரண வாழ்க்கையை மதிக்கும் ஒவ்வொருவரும் வெற்றிக்காக இடைவேளை இன்றி நூறு சதவீதம் வேலை செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.
Ukraine will win this war. The world will win this war. The truth will win this war. The key thing is for all of us in Ukraine and everyone in the world who values normal life to work one hundred percent without a break for the sake of victory. pic.twitter.com/dZ5TolBB0j
— Володимир Зеленський (@ZelenskyyUa) August 7, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |