யார் என்ன சொன்னாலும் எல்லாவற்றையும் மீறி முன்னேறுகிறோம் - ஜெலென்ஸ்கி
உக்ரைன் படைகள் எல்லாவற்றையும் மீறி முன்னேறி வருவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல்கள்
18 மாதங்களாக நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போர், இருதரப்பில் இருந்தும் ட்ரோன் தாக்குதலாக சென்று கொண்டிருக்கிறது.
பல நாடுகளின் உதவிகளை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பெற்று வந்தாலும், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் போராடி வருகிறது.
Twitter (@ZelenskyyUa)
ஜெலென்ஸ்கி நம்பிக்கை
இதற்கிடையில் தங்கள் நாட்டின் பள்ளி மாணவர்கள் படிப்பை தொடங்கியிருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
அவர், போர் இருக்கும் சமயத்திலும் உக்ரேனிய பள்ளி மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் தொடங்கியிருப்பதாக கூறினார்.
இந்த நிலையில், ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் 'உக்ரைன் படைகள் முன்னேறி வருகின்றன. எல்லாவற்றையும் மீறி, யார் என்ன சொன்னாலும், நாங்கள் முன்னேறுகிறோம். அதுதான் மிக முக்கியமான விடயம். நாங்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
Ukrainian forces are moving forward. Despite everything and no matter what anyone says, we are advancing, and that is the most important thing. We are on the move. pic.twitter.com/emWoZG8WSa
— Володимир Зеленський (@ZelenskyyUa) September 2, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |