ரஷ்யாவின் பெயரைக் கூறவே அமெரிக்கா பயப்படுகிறது! ஜெலென்ஸ்கி தடாலடி
ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் எதிர்வினை பலவீனமாக இருப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான Kryvyi Rihயில், ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 9 பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்ததைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கி அமெரிக்காவை சாடியுள்ளார்.
அதாவது, ரஷ்யா மீது எதிர்வினையாற்ற அமெரிக்கா தயக்கம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டு
அமெரிக்கா குறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், "ரஷ்யாவின் பெயரைக் கூட குறிப்பிட அமெரிக்கா பயப்படுகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர எங்களுக்கு அறிக்கை மட்டும் போதாது, ரஷ்யா மீது அழுத்தம் தேவை. ரஷ்யா மீண்டும் மீண்டும் குழந்தைகளை கொல்லும் பாதையை தெரிவு செய்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் ஏவுகணை தாக்குதலால் சிலர் உயிரிழந்ததை குறிப்பிட்டு, இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்கு இதுவே காரணம் என்று கூறியதை, போதுமான எதிர்வினையாக கருதவில்லை என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |