100,000 வீரர்கள் கொன்று குவித்த உக்ரைன்: இழப்பை மறைமுகமாக ஒப்புக் கொண்டதா ரஷ்யா?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் 10 மாத கால முழு நீள போர் தாக்குதலில் உக்ரைனிய படைகள் சுமார் 100,000 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்து இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
100,000 ரஷ்ய வீரர்கள்
உயிரிழப்பு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை 97,690 ரஷ்ய வீரர்கள் உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரேனிய ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை அறிவித்து இருந்தனர்.
அத்துடன் கடந்த கடந்த நாளில் மட்டும், குறைந்தது 5 டாங்கிகள், 6 கவச பாதுகாப்பு வாகனங்கள், 1 பீரங்கி அமைப்பு, 4 ட்ரோன்கள், 61 கப்பல் ஏவுகணைகள், 14 டிரக்குகள் மற்றும் டேங்கர்கள் மற்றும் 2 யூனிட் சிறப்பு உபகரணங்களை மாஸ்கோ இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
"All cruelty springs from weakness."
— Defense of Ukraine (@DefenceU) December 17, 2022
Seneca
Total combat losses of the enemy from Feb 24 to Dec 17: pic.twitter.com/PV9ljKEwR3
இந்நிலையில், உக்ரைனிய ஆயுதப்படைகளின் புதிய புதுப்பிப்புகளில், நாட்டில் அத்துமீறலில் ஈடுபட்டு இருந்த 100,000 ரஷ்ய வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக (அதாவது கொல்லப்பட்டு இருப்பதாக) உக்ரைனிய பாதுகாப்பு துறையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தியதா ரஷ்யா?
உக்ரைனிய படைகள் வெளியிட்டு வரும் இழப்பு எண்ணிக்கைகள் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காத ரஷ்யா, உயிரிழப்புகள் குறித்து தங்களது அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறது.
100,000 soldiers have been recognized with awards in 10 months of the full-scale war - russian #DefMin Sergei Shoigu.
— Defense of Ukraine (@DefenceU) December 22, 2022
What an amazing coincidence. pic.twitter.com/ESM2fKmaXk
இதற்கிடையில் “10 மாத கால முழு நீள போர் தாக்குதலில் 100,000 வீரர்கள் விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்து இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் என்னவொரு அற்புதமான தற்செயல் என்றும் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.