100 மணி நேரத்தில் 110 உணவுகள்; உலக சாதனைப்படைத்த அந்த பெண்மணி யார்?
நைஜீரிய சமையல் கலைஞரான ஹில்டா எஃபியோங் பாஸ்ஸி உலக சாதனை படைக்கும் முயற்சியில் 100 மணி நேரம் இடைவிடாது சமைத்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
100 மணிநேரம் தொடர்ந்து சமைத்தது எப்படி,
சமூக ஊடகங்களில் ஹில்டா பேசி என்று அழைக்கப்படும் இவர் கடந்த வியாழன் அன்று சமைக்கத் தொடங்கி திங்கள் வரை தொடர்ந்து சமைத்துள்ளார்.
Our records team is looking forward to reviewing the evidence from Hilda's epic cooking marathon.https://t.co/fzRlNpqU8e
— Guinness World Records (@GWR) May 16, 2023
சிறந்த சமையலை காட்டும் வகையில் 55 க்கும் மேற்பட்ட சமையல் வகைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட உணவுகளை தயாரித்துள்ளார்.
மேலும் அவர் நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை சமைத்தார்.வெளிநாட்டு உணவு வகைகளையும் சமைத்துள்ளார்.
அவர் உற்சாகத்துடன் சமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பலர் பாடல்களை பாடியும் நடனங்கள் ஆடியும் அவரை உற்சாகப்படுத்தியுள்ளார்கள்.
இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த லதா டாண்டன் என்ற சமையல் நிபுணர் ஒருவர் 87 மணிநேரம் 45 நிமிடங்கள் தொடர்ந்து சமைத்துள்ளார். ஆனால் அவரை முறையடிக்கும் வகையில் தற்போது இவர் 100 மணிநேரம் சமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.