நாட்டைவிட்டு வெளியேறிய பிரதமர்..ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் வன்முறையில் பலி
வங்காளதேசத்தில் பிரதமர் வெளியேறிய பின்னரும் 100க்கும் மேற்பட்டோர் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலகிய பிரதமர்
கடந்த சில வாரங்களாக வங்காளதேசத்தில் தொடர்ந்து வரும் வன்முறையைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகினார்.
அதன் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய அவர் , இராணுவ விமானம் மூலமாக இந்தியாவுக்கு சென்றார்.
தற்போது வங்காளதேசத்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், டாக்காவில் உள்ள பிரதமர் மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடினர்.
119 பேர் பலி
நேற்று மட்டும் நாட்டின் பல்வேறு இடஙக்ளில் நடந்த வன்முறையில் 119 பேர் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதன்மூலம் தற்போது வரை வங்காளதேசத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இணைய ஊடகமான பிடிநியூஸ்24 வெளியிட்டுள்ள செய்தியில், 'வங்காளதேசத்தில் இன்று காலை அமைதி திரும்பியுள்ளது. பேருந்துகள், வாகனங்கள் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன' என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |