வங்கதேசத்தின் பிரதமர் நாட்டைவிட்டே வெளியேறக் காரணமான நபர்... யாரிந்த மாணவர் தலைவர்
நீண்ட 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பலம்பொருந்திய பிரதமர் ஒருவரை நாட்டைவிட்டே வெளியேற்றியவர், அதிர்ந்து பேசாத ஒரு மாணவர் தலைவர் என்பதுடன், அவர் தொடர்பிலான பின்னனி வெளியாகியுள்ளது.
தேசிய அளவில் புகழ்
வங்கதேசத்தின் மாணவர்கள் போராட்டம் தொடங்கியதன் பின்னர், தலையில் தேசியக் கொடியை கட்டிக்கொண்டு அடிக்கடி பொதுவெளியில் காணப்பட்டு வந்தவர் Nahid Islam.
சமூகவியல் மாணவரான 26 வயது இஸ்லாம் அரசாங்க வேலைகளில் ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார், அது பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் பிரச்சாரமாக உருவெடுத்தது.
மாணவர்கள் போராட்டங்கள் கடுமையாக மாறியதால் அவரையும் வேறு சில டாக்கா பல்கலைக்கழக மாணவர்களையும் பொலிசார் கைது செய்த பின்னர் ஜூலை நடுப்பகுதியில் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றார்.
நாடு முழுவதும் பல வாரங்களாக நீடித்த வன்முறை சம்பவங்களில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மானவர்கள் என ஏறக்குறைய 300 பேர்கள் கொல்லப்பட்டனர். இந்த நெருக்கடி நிலை ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறியதன் பின்னர் தான் தணிந்துள்ளது.
இந்த நிலையில் இஸ்லாம் உட்பட மாணவர்கள் தலைவர்கள் சிலர் ராணுவ தளபதியை சந்திக்க உள்ளனர். மேலும், ராணுவம் ஆதரிக்கும் அல்லது ராணுவத்தால் முன்னெடுக்கப்படும் எந்த அரசாங்கத்தையும் தாங்கள் ஏற்பதாக இல்லை என்றே இஸ்லாம் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
பாசிச சக்திகளுக்கு இடமில்லை
மட்டுமின்றி, உருவாகும் புதிய அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இருக்க வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளார். திங்களன்று ஊடகவியலார்களை சந்தித்த இஸ்லாம், எங்கள் சுயலாபத்திற்காக தியாகிகள் சிந்திய இரத்தத்தை காட்டிக் கொடுக்க மாட்டோம் என்றார்.
மேலும், பாதுகாப்பான வாழ்க்கை, சமூக நீதி, புதிய அரசியல் ஆகியவற்றின் மூலம் புதிய ஜனநாயக வங்காளதேசத்தை உருவாக்குவோம் என்றும் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
பாசிச சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள இஸ்லாம், இந்து சிறுபான்மையினரையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறு சக மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
டாக்காவில் 1998ல் பிறந்துள்ள இஸ்லாம் திருமணமானவர். ஆசிரியரின் மகனாக பிறந்த இவருக்கு ஒரு சகோதரரும் உள்ளார். நாடு ஒரு அரசியல் மாற்றத்தை பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பதாக அவர் அடிக்கடி கூறி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |