ஆப்பிரிக்க நாடொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி! மேலும் உயரும் என அறிவிப்பு
எத்தியோப்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.
கனமழையால் நிலச்சரிவு
தெற்கு எத்தியோப்பியாவின் வோலைட்டா பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இறப்பு எண்ணிக்கை உயரும் என்றும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட Kindo Didaye மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராதவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் தலைமை நிர்வாகி Samuel Fola கூறினார்.
பாரிய நிலச்சரிவை எதிர்நோக்குகிறோம்
மேலும் அவர் கூறுகையில், "இறந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். நாங்கள் இப்போது முன்னெச்சரிக்கையாக 300க்கும் மேற்பட்டோர்களை வெளியேற்றியுள்ளோம் மற்றும் மற்றொரு பாரிய நிலச்சரிவை எதிர்நோக்குகிறோம்" என்றார்.
இந்த நிலையில் பிராந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, Wolaita பகுதியில் வேகமாக மீட்பு முயற்சி நடந்து வருகிறது.
200க்கும் மேற்பட்டோர்
முன்னதாக, கடந்த மாதம் எத்தியோப்பியாவின் மற்றொரு பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுக்கு பலியாகினர்.
எத்தியோப்பியாவில் மழைக்காலத்தில் நிலச்சரிவுகள் பொதுவானவை மற்றும் இது சூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |