காஸாவில் இருந்து கால்நடையாக வெளியேறிய 15,000 மக்கள்!
வடக்கு காஸாவில் உள்ள மண்டலத்தில் இருந்து 15,000 மக்கள் வெளியேறியதாக, ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
10,500 மக்கள் பலி
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காசா பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலினால் அங்கு கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 10,500ஐ கடந்துள்ளது.
மேலும் இதில் 4,300க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Ahmed Zakot/Sipa USA/AP
அதேபோல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், வன்முறை மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 160க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வேகமாக வெளியேறும் மக்கள்
இதற்கிடையில் காஸாவில் இஸ்ரேலின் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், போர் மண்டலத்தில் இருந்து பாலஸ்தீனிய குடிமக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர்.
Maxar Technologies/Reuters
திங்கள் அன்று 5,000 பேரும், ஞாயிற்றுக்கிழமை 2,000 பேரும் வெளியேறினர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை சுமார் 15,000 பேர் வெளியேறியதாக மனிதாபிமான விவகாரங்களில் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக IDF வெளியேற்றும் சாளரத்தைத் திறந்தது, மேலும் தெற்கில் இருந்து கால்நடையாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
Hatem Moussa/AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |