இந்தியாவில் கொதிக்கும் வெப்பம்: 170 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் அதிகரிக்கும் வெப்ப அலைகளின் தாக்கத்தால் கிட்டத்தட்ட 170 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பம்
இந்தியாவின் வட மாநிலங்களில் கோடை காலங்களில் வெப்பம் கடுமையாக கொதிக்கும், அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலையானது தொடர்ச்சியாக சராசரி வெப்பநிலையை விட அதிகமாக பதிவாகி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை சராசரி வெப்பநிலையை விட அல்லது 45செல்சியஸ்(113 பரான்ஹீட்) விட 4.5 செல்சியஸ் வெப்பம் அதிகமாக காணப்பட்டால் வெப்ப அலைகள் தாக்கம் இருப்பதாக கணக்கிடப்படும்.
Sky News
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 43 செல்சியஸ்(110 பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி உள்ளது.
170 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் அதிகரிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல் இந்தியாவின் வட மாநிலங்களில் சுமார் 170 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Sky News
அதிகமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 119 பேரும், அதன் அருகாமை மாநிலமான பீகாரில் 47 பேரும் வெப்பம் அதிகரித்தால் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அறிஞர் அதுல் குமார் சிங், கடந்த சில நாட்களாக அந்த பகுதிகளில் வெப்ப அலைகளுக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |