படகு கவிழ்ந்ததில் 2 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு: 232 பேர் மீட்பு
லெபனான் கடற்கரையில் சனிக்கிழமையன்று படகு கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 232 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்பவர்களின் ஆபத்தான பயணம்
சொந்த நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல்வேறு நாட்டு மக்களும் ஆபத்தான கப்பல் பயணங்கள் மூலம் ஐரோப்பாவை வந்தடைய முயற்சிக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த செப்டம்பரில் வடக்கு லெபனானில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சென்ற புலம்பெயர்ந்தவர்களில் 34 பேர் வடக்கு சிரிய துறைமுக நகரமான டார்டஸின்(Tartus) கடற்கரையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
இது அரசாங்கங்களுக்கு மத்தியிலும், புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
படகு கவிழ்ந்து விபத்து
இந்நிலையில் சனிக்கிழமையன்று லெபனான் கடற்கரையில் படகு கவிழ்ந்தது இரண்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ள தகவலில், லெபனான் கடற்கரையில் சனிக்கிழமையன்று அவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர் மற்றும் 232 பேர் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்கால படையால் இயக்கப்படும் மூன்று கடற்படைக் கப்பல்களும் (UNIFIL) லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் வடக்கே உள்ள செலாட்டாவில் மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.