ராட்சத கிரேன் விழுந்து பலியானவர்களில் இருவர் தமிழர்கள் என தகவல்! உயிரிழப்பு 20 ஆக உயர்வு
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் கிரேன் விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ராட்சத கிரேன் விபத்து
மராட்டிய மாநிலம் தானேயில் விரைவு சாலையின் கட்டுமானப் பணியின்போது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் பலியாகினர்.
மேலும் மூன்று பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ANI
தமிழர்கள் பலி
மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்தோஷ். மற்றொருவர் திருவள்ளூரைச் சேர்ந்த கண்ணன் ஆவார்.
இதற்கிடையில் விபத்தில் சிக்கியுள்ள 6 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் நிவாரண நிதியில் இருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ANI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |