காஸா பகுதியில் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட 200 பிரித்தானியர்கள்: தற்போதைய நிலை
காஸா பகுதியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் 200 பிரித்தானியர்கள் ரஃபா எல்லையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 200 பிரித்தானியர்களும்
காஸா பகுதிக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் நோக்கில் கடந்த வாரம் முதல் முறையாக ரஃபா எல்லை திறக்கப்பட்டது.
@epa
ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த 200 பிரித்தானியர்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
காசாவிற்கும் எகிப்திற்கும் இடையே உள்ள ரஃபா கிராசிங் மட்டுமே இஸ்ரேலுக்குள் செல்லாமல், தரை வழியாக காஸா பகுதியை விட்டு வெளியேறும் ஒரே வழி.
இந்த நிலையில், காஸா மீதான தாக்குதலை நிறுத்தவும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும் வெளிநாட்டு குடிமக்கள் வெளியேறவும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேலுக்கு அழுத்தமளித்து வருவதாக கூறப்படுகிறது.
@alamy
ஆனால் அதற்கான பலன் இன்னும் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, இரவோடு இரவாக இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் வடக்கு காஸா பகுதிக்குள் புகுந்துள்ளதாக தகவல் வெளியானது.
7,000 கடந்துள்ளதாக தகவல்
தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த வாரத்தில் அது நடக்கும் என்றே கூறுகின்றனர். இந்த சூழலில் ரஃபா எல்லை திறக்கப்படுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஹமாஸ் படைகளை அழிக்கும் நோக்கில் காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. பலி எண்ணிக்கை 7,000 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, காஸா பகுதியில் சிக்கியுள்ள பிரித்தானியர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரிதமர் ரிஷி சுனக், காஸா பகுதியில் இருந்து அவர்களை மீட்டு, நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |