மால்களில் பொம்மை போல் நடித்து திருடிய 22 வயது இளைஞர்: விதிக்கப்பட இருக்கும் அதிகபட்ச தண்டனை
போலந்து நாட்டில் பொம்மை போல் நடித்து வணிக வளாகம் ஒன்றில் திருடிய 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மால்களில் கைவரிசை
போலந்து நாட்டின் வணிக வளாகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 22 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக வணிக வளாகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருக்கும் பொம்மை போல் நடித்துள்ளார்.
Pic: Warsaw Police
இவ்வாறு பகல் முழுவதும் பொம்மை போல் நடித்து விட்டு இரவு நேரத்தில் மால்களில் தன்னுடைய கைவரிசையை காட்டியுள்ளார்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு போலந்து நாட்டின் சட்டப்படி, இளைஞருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தகவல் தெரியவந்துள்ளது.
Pic: Warsaw Police
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |