ரஷ்யாவில் 3 மாணவிகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கு..அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 28 வயது மாணவர்
ரஷ்யாவின் இடாகோ பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவியல் நீதி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள் படுகொலை
மாஸ்கோ நகரில் அமைந்துள்ள இடாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கைலீ, மேடிசன் மோகென், ஸேனா ஆகிய மூன்று மாணவிகளும், ஈத்தன் சாபின் என்ற மாணவரும் கடந்த நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் குற்றவியல் நீதி பயிலும் 28 வயது மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவரின் பெயர் கிறிஸ்டோபர் கோபெர்கர் என தெரிய வந்துள்ளது. FBI கண்காணிப்புக் குழு நான்கு நாட்களாக கண்காணித்து, கைது ஆணையை பெற்ற பின்னர் குறித்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
கிறிஸ்டோபர் மீதான சந்தேகம்
கிறிஸ்டோபர் கோஹ்பெர்கரின் டி.என்.ஏ, மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வளாகத்திற்கு வெளியே உள்ள வீட்டில் மீட்கப்பட்ட பொருட்களில் உள்ள மரபணுவுடன் பொருந்தியுள்ளது.
Monroe Co. Correctional Facility
அவர் கொலை நடந்த இடத்தில் இருந்து பென்சில்வேனியாவுக்கு சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது.