காசா பகுதியில் குவிந்துள்ள 35,000 ஹமாஸ் வீரர்கள்: இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் அழுத்தம்
சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த தாக்குதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 7,292 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இஸ்ரேலில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,405 பேரும், காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5,791 பேரும் உயிரிழந்தனர்.
35,000 ஹமாஸ் வீரர்கள்
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளை எதிர்த்து ஹமாஸ் வீரர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வரும் நிலையில், ஹமாஸ் படை வீரர்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Ghazi Hamad, a member of the Hamas political department, said that 35,000 fighters of the organization are in the Gaza Strip. pic.twitter.com/eXQ8i7j7tF
— NEXTA (@nexta_tv) October 24, 2023
இந்நிலையில் இஸ்ரேலிய படைகளை எதிர்த்து சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஹமாஸ் அரசியல் துறை உறுப்பினர் காஜி ஹமாத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |